பொலிஸ் தேர்தல்கள் கடமைகள் எஸ்.டி.ஐ.ஜி. ஜகத் அபேசிரி குனவர்தனவிடம் ஒப்படைப்பு

பொலிஸ் தேர்தல்கள் கடமைகள் எஸ்.டி.ஐ.ஜி. ஜகத் அபேசிரி குனவர்தனவிடம் ஒப்படைப்பு

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக (எஸ்.டி.ஐ.ஜி.) ஜகத் அபேசிறி குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல், அடுத்த மாதம் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையிலும், மிக விரைவில் ஜனடஹிபதித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கபப்டும் நிலையிலுமேயே, தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பெயரிடப்ப்ட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன, தற்போது மேல் மாகாணம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு  பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக  கடமையாற்றும் நிலையிலெயே இந்த மேலதிக பொறுப்பு ஒப்படைக்கப்ப்ட்டுள்ளது.

கடந்த  உள்ளூராட்சி மற்றும் பாரளுமன்ற தேர்தல்களின் போது தேர்தல்கள் கடமைகளுக்கு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவே  பொருப்பாக இருந்திருந்தார்.

தற்போது அவர் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமைகளை முன்னெடுத்துள்ளதால் ஜகத் அபேசிரி குனவர்தனவிடம் தேர்தல்கள் பணி ஒப்படைக்கப்ப்ட்டுள்ளன. பொலிஸ் தினைக்களத்தில் அதிகமான  தேர்தல்கள் பனிகளுக்கு பொறுப்பாக இருந்தார் என்ர பெருமை, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பாக இருந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்னவிடம் உள்ளது.

இவ்வாறான பின்னணியில் முதலில் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் வாக்கெடுப்பை 47 மத்திய நிலையங்களினூடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11 ஆம் திகதி நடத்தப்படவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 5 பிரதான கட்சிகள் போட்டியிடவுள்ளன. தேர்தலுக்காக 15 மில்லியன் ரூபா வரை செலவிடப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்ரது.

இதனிடையே, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் அடுத்த மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளமைக்கான வர்த்தமானியை காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண கடந்த ஐந்தாம் திகதி  வௌியிட்டிருந்தார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உடனடியாக தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் கடந்த 30 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டதற்கமைய  இந்த வர்த்தமானி வெளியிடப்ப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.